Weekend poets...
sureshbabusugumara
Jul 18
1 min read
அம்மா
கோடி உறவு நம்முடன் இருப்பின்,
நம்மை கோடி முறை நேசிக்கும்
ஒரே ஓர் உறவு
💖 அம்மா 💖
- திருமதி. ஸ்ரீலேகா ராமன்
ஒற்றுமை
ஒன்றுபட்டால் இனிமை ✨
வானத்தில் நட்சத்திரம் பல இருந்தாலும்,
வானம் மட்டும் ஒன்றுதான்;
மனிதர்கள் பலரோ இருந்தாலும்,
மனங்கள் இணைந்தால் உலகம் ஒன்றுதான்.
நிறங்கள் பல சேர்ந்து தான்,
வானவில் அழகாகிறது;
மனங்கள் பல இணைந்து தான்,
வாழ்க்கை இனிமையாகிறது.
ஒன்றாய் இணைவோம் வானவில்லை போல் அழகாய் வாழ்வோம்.
ஒன்றுபட்டு சிரிக்கும் முகங்கள், அழகான பூக்களை போல் இவ்வுலகை மிளிர வைப்போம்
- திரு. டில்லிராஜ் தசரதன்



Comments